/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாரி-பைக் மோதல்; ஒருவர் பலி, இருவர் காயம்
/
லாரி-பைக் மோதல்; ஒருவர் பலி, இருவர் காயம்
ADDED : மே 07, 2024 02:32 AM
தாராபுரம்;தாராபுரம் அருகே, லாரி மீது பைக் மோதிய விபத்தில், ஒருவர் பலியானார்.
இருவர் காயமடைந்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள செலாம்பாளையத்தை சேர்ந்த பூபதி மகன் ஆதிகிஸ்கரன், 24. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் யமஹா பைக்கில் தாராபுரம் நோக்கி சென்றார். அவருக்கு முன்னால், உடுமலையிலிருந்து தாராபுரம் நோக்கி கரும்பு லோடு ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், எதிரே சிக்கினாபுரத்தை சேர்ந்த நவீன் குமார், 23, என்பவருடன், அதே பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், 30, என்பவர் ஓட்டி வந்த பல்சர் பைக், ஆதிகிஸ்கரன் சென்ற பைக்கில் மோதியது. இதில், நிலை தடுமாறிய இரு பைக்குகளில் சென்ற மூன்று பேரும், கரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரியில் விழுந்தனர். இதில், படுகாயம் அடைந்த ஆதிகிஸ்கரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் காயங்களுடன், தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.