/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வனப்பகுதியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
/
வனப்பகுதியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
ADDED : மே 16, 2024 04:27 AM
அந்தியூர்,: வனப்பகுதியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி, தட்டக்கரையில், கர்ககேண்டி செல்லும் சாலையில், நேற்று அதிகாலை டாரஸ் லாரி ஒன்று, வனப்
பகுதி சாலையோரத்தில் கவிழ்ந்தது. சம்பவ இடத்திற்கு வந்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தியதில், கர்நாடகா மாநிலம், கொள்ளேகால் பகுதியை சேர்ந்த, ஜெபி, 35, என்பதும், இவர் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து தவிடு மூட்டைகளை டாரஸ் லாரியில் ஏற்றிக்கொண்டு, கர்நாடகா மாநிலம், நர்சிங்கபுரத்திற்கு செல்வதற்காக, தட்டக்கரை வழியே வரும் போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது தெரியவந்தது. இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி டிரைவர் ஜெபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவரது உடலை மீட்ட பர்கூர் போலீசார், உடற்கூறு ஆய்விற்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.