/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண் வியாபாரிகளை அடிக்க முயற்சி? நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது புகார்
/
பெண் வியாபாரிகளை அடிக்க முயற்சி? நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது புகார்
பெண் வியாபாரிகளை அடிக்க முயற்சி? நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது புகார்
பெண் வியாபாரிகளை அடிக்க முயற்சி? நகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது புகார்
ADDED : செப் 10, 2024 07:29 AM
புன்செய் புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகில், சத்திரம் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான எம்.ஜி.ஆர்., வணிக வளாகத்தில் பழக்கடை, பூ மற்றும் பூஜை பொருட்கள் கடைகள் அமைந்துள்ளன. கடைகள் கட்டப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு மேலானதால் இடித்துவிட்டு புதிய வணிக வளாக கடைகள் கட்ட, கடை நடத்துபவர்களை காலி செய்ய, நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்நிலையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கருப்புசாமி தலைமையிலான துப்புரவு பணியாளர்கள், நகராட்சி கழிவுநீர் மற்றும் குப்பை சேகரிக்கும் வாகனத்துடன் கடைகளுக்கு நேற்று வந்தனர். கடைகளுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தி, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தேங்காய் பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களை குப்பை வாகனத்தில் அள்ளி போட்டுள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த பெண் வியாபாரிகள், அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர், தகாத வார்த்தை பேசியதுடன், அடிப்பதற்கு கையை ஓங்கியதாக, பெண்கள் புகார் தெரிவித்தனர். புளியம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு நகராட்சி அதிகாரிகள் சென்றனர்.இதுகுறித்து கடைக்காரர்கள் சிலர் கூறியதாவது: புதிய வணிக வளாக கடை கட்டும் முன் கமிட்டி அமைத்து, தற்போது கடை நடத்துபவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த அரசு கூறியுள்ளது. அப்படி எதுவும் நடத்தப்படவில்லை. கட்டிய டெபாசிட் தொகையை நகராட்சி அலுவலகத்தில் திருப்பித் தர கேட்டால் காலம் தாழ்த்துகின்றனர். டெபாசிட் தொகையை திருப்பி கொடுத்து, புதிதாக கட்டும் வணிக வளாகத்தில் கடை ஒதுக்கினால் மட்டுமே, இந்த கடைகளை காலி செய்வோம். இவ்வாறு கூறினர். அவர்கள் மேலும் கூறுகையில், 'குப்பை சேகரிக்கும் வாகனத்துடன் வந்து கடைகளில் இருந்த பொருட்களை துாக்கி வீசியதுடன், இதுகுறித்து கேட்ட பெண்களை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் தகாத வார்த்தை பேசி, அடிப்பதற்கு கையை ஓங்கி கொண்டு வருகிறார். வியாபாரிகளிடம் நகராட்சி நிர்வாகம் அராஜகமாக நடந்து கொள்வது எந்த விதத்தில் சரி' என்றனர்.