/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மதுபாட்டில்கள் விற்பனை கடத்துாரில் இருவர் கைது
/
மதுபாட்டில்கள் விற்பனை கடத்துாரில் இருவர் கைது
ADDED : ஏப் 24, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே அனுமதியின்றி, மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த இருவரை கடத்துார் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோபி அருகே கூடக்கரை மற்றும் புதுகொத்துக்காடு பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கூடக்கரையை சேர்ந்த, செல்லப்பன், 61, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த, சரத்குமார், 28, ஆகியோர் அனுமதியின்றி, மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

