/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'யு-டர்னை' தடுக்கும் முயற்சியில் 'யு-டர்ன்'; மேட்டூர் சாலையில் 'கபடி'
/
'யு-டர்னை' தடுக்கும் முயற்சியில் 'யு-டர்ன்'; மேட்டூர் சாலையில் 'கபடி'
'யு-டர்னை' தடுக்கும் முயற்சியில் 'யு-டர்ன்'; மேட்டூர் சாலையில் 'கபடி'
'யு-டர்னை' தடுக்கும் முயற்சியில் 'யு-டர்ன்'; மேட்டூர் சாலையில் 'கபடி'
ADDED : செப் 03, 2024 03:44 AM
ஈரோடு: ஈரோட்டில் மேட்டூர் சாலை, பரிமளம் காம்ப்ளக்ஸ் அருகே, வாகனங்கள் யு-டர்ன் எடுத்து சென்றன. இதை தடுக்கும் வகையில் கடந்த, 31ம் தேதி மாலை அந்த இடத்தில் பேரிகார்டு வைத்து, போலீசார் தடுத்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்காமல் வாகனங்கள் தடையின்றி சென்றன.
செப்.,1ம் தேதி இரவில் பேரிகார்டுகளை போக்குவரத்து போலீசாரால் அகற்றப்பட்டது. நேற்று காலை சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்தனர். மேட்டூர் சாலையில் தினமும் ஒரு மாற்றம் அமலுக்கு வருவது வாகன ஓட்டிகளை சிரமத்தில் தள்ளியுள்ளது. உண்மையில் யு-டர்னை தடுத்து, போக்குவத்து பாதிப்பை தடுக்கத்தான் போலீசார் பேரிகார்டு வைத்தனரா அல்லது தனியார் வர்த்தக நிறுவனங்களை திருப்திபடுத்த பேரிகார்டை வைத்து அகற்றியுள்ளனரா? என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன் கூறியதாவது: சோதனை அடிப்படையில்தான் பேரிகார்டு வைத்தோம். ஆனால் வெற்றி அடையவில்லை. மக்கள் சிரமப்படுவதாக கருத்து எழுந்தது.
சென்னையில் ஒரு சில சாலைகளில், ௨ கி.மீ., சென்று யு-டர்ன் எடுக்கும் நிலை உள்ளது. அங்கு மக்கள் ஏற்று கொண்டுள்ளனர். ஆனால், இங்கு ஏற்க மறுக்கின்றனர். இதனால் மெதுவாகவே போக்குவரத்து விதிகளை அமல்படுத்த வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.