/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விசைத்தறிகளுக்கு மின்கட்டண உயர்வில் இருந்து விலக்களிக்க வலியுறுத்தல்
/
விசைத்தறிகளுக்கு மின்கட்டண உயர்வில் இருந்து விலக்களிக்க வலியுறுத்தல்
விசைத்தறிகளுக்கு மின்கட்டண உயர்வில் இருந்து விலக்களிக்க வலியுறுத்தல்
விசைத்தறிகளுக்கு மின்கட்டண உயர்வில் இருந்து விலக்களிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 18, 2024 01:57 AM
ஈரோடு: உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் இருந்து, விசைத்தறிகளுக்கு மட்டும் விலக்களிக்க நெசவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த, 2 தினங்களுக்கு முன் மின் கட்டணம் உயர்த்-தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்ட-மைப்பு சார்பில், முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியதா-வது:
விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட, தேர்தல் வாக்குறுதிப்படி, இலவச மின்சாரம், 750 யூனிட்டில் இருந்து, 1,000 யூனிட்டாக உயர்த்தப்பட்டது. 1.68 லட்சம் விசைத்தறிகள், அதை நம்பிய நெசவாளர்கள் பயன் பெற்றனர்.
கடந்த, 2021 ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது, அப்போதைய மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி-யிடம் முறையிட்டோம். வரும் காலங்களின் மின் கட்டணம் உய-ரும்போது, விசைத்தறிகளுக்கு விலக்களிக்கப்படும் என உறுதிய-ளித்தார்.
ஆனாலும் கடந்தாண்டு ஜூலையில் மின் கட்டணம் உயர்த்தப்-பட்ட போது, விசைத்தறிகளுக்கான 'டேரிப்-3ஏ2' மின் இணைப்-புகளுக்கு யூனிட்டுக்கு, 10 காசு உயர்ந்தது. தற்போது, யூனிட்-டுக்கு, 35 காசு உயர்த்தி இருப்பது, மிகுந்த பாதிப்பை தரும். 1.68 லட்சம் விசைத்
தறியில், 68,000 விசைத்தறிகள் மட்டும், 1,000 யூனிட்டுக்குள் வருகின்றன. மீதமுள்ள, 1 லட்சம் விசைத்தறியாளர்கள் கடுமை-யாக பாதிக்கப்படுவர்.
கடந்த, 2022ல், 1,000 முதல், 1,500 யூனிட் வரை, விசைத்தறி கட்டணம் மானியம் போக, 4.15 ரூபாய் என இருந்தது, 10 காசு உயர்ந்து, 4.25 ரூபாயானது. தற்போது, 35 காசு உயரும்போது, 4.60 ரூபாயாகும். கடந்த, 2022ல், 1,501 யூனிட்டுக்கு மேல், 5.30 ரூபாயாக இருந்து, 5.40 ரூபாயானது. தற்போது, 5.75 ரூபா-யாகி உள்ளது.
சராசரியாக இயக்கப்படும் விசைத்தறி ஒன்றுக்கு, 35 காசு உயர்வால், 2 மாதத்துக்கு, 1,750 ரூபாய், 5 சதவீத வரி, 87.50 ரூபாய், பிக்ஸ்டு கட்டணம், 120 ரூபாய் என, 1,950 ரூபாய் முதல், 2,000 ரூபாய் மின் கட்டணம் உயரும்.
ஏற்கனவே, துணிகளுக்கு விலை இல்லை. நுால் விலை ஸ்திரமற்-றுள்ளது. விசைத்தறிகள், 24 மணி நேரம் இயக்கும் அளவுக்கு ஆர்டர்கள் இல்லை. அரசின் இலவச வேட்டி, சேலை உட்பட பிற பணிகளும் வழங்கப்படாததால், பல தறிகள் மூடப்பட்டுள்-ளன.
எனவே, விசைத்தறியாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, விசைத்தறிகளுக்கான மின் கட்டண உயர்வை விலக்கி கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.