/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தோல் கழலை நோய் தாக்கம் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஏற்பாடு
/
தோல் கழலை நோய் தாக்கம் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஏற்பாடு
தோல் கழலை நோய் தாக்கம் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஏற்பாடு
தோல் கழலை நோய் தாக்கம் கால்நடைகளுக்கு தடுப்பூசி ஏற்பாடு
ADDED : ஆக 06, 2024 01:43 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும், தோல் கழலை நோய் தாக்கத்தில் இருந்து தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நோய் பாதித்த கால்நடையின் கண்ணில் நீர் வடியும். மூக்கில் சளி வடியும். கடும் காய்ச்சல், உடல் முழுவதும் வீங்குதல். உருண்டையான கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறுதல், நிணநீர் சுரபிகள் பெரிதாக காணப்படுதல், கால்கள் வீங்கி இருத்தல்
அறிகுறியாகும்.
இந்நோய் பாதித்த மாடுகளில் தற்காலிகமாக பால் உற்பத்தி குறைவு, சினை பிடிப்பதில் பாதிப்பு ஏற்படும். தீவனம் சரியாக உட்கொள்ளாது. உடல் எடை குறையும். இளம் சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும். சில மாடுகளுக்கு மடி நோய் ஏற்படும்.
மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் தடுப்பூசி குழுக்கள் அமைத்து, தடுப்பூசி செலுத்தும் பணி நடக்க உள்ளது. இதற்காக நடத்தப்படும் முகாமை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.