/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீ.சத்திரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
/
வீ.சத்திரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
வீ.சத்திரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
வீ.சத்திரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED : செப் 16, 2024 03:07 AM
ஈரோடு: ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.
கோவிலில் திருப்பணி முடிந்த நிலையில், கடந்த, ௮ம் தேதி காலை, கும்பாபிஷேக நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து, 14ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை, விக்ரகங்களுக்கு கண் திறத்தல், விமான கலசம் வைத்தல், மாலையில் மூன்றாம் கால யாக பூஜை, மூல விக்ரகங்களுக்கு யத்திரஸ்தாபனம் நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, கலச புறப்பாடு, கோபுர விமானம் கும்பாபிஷேகம் நடந்தது. 8.10 மணிக்கு பரிவார மூர்த்திகள், மூலவர் மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம்
செய்யப்பட்டது.
பிறகு மகா அபிஷேகம், அலங்காரம், தச தானம், தச தரிசனம், மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்குமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நசியனுாரில்...
நசியனுார், எம்.ஓலப்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக கும்பாபிஷேக நிகழ்வு கடந்த, 12ம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலைகளில் தினமும் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் நேற்று காலை, 7:௪௫ மணிக்கு நடந்தது. சுற்று வட்டார பகுதி மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
* தென்முகம் வெள்ளோடு கிராமம், உலகபுரம் புதுார் (முத்தையன் வலசு) வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. சென்னிமலை மலை அடிவாரத்தில், சென்னிமலை முருகன் கோவில் கட்டிய ஆயித்துறை செங்கத்துறை பூசாரியார் ஆலயம் மற்றும் கணபதி, சிவபெருமான் ஆலய கும்பாபிேஷகமும் நேற்று காலை நடந்தது.
இடையன்காட்டு வலசில்...
ஈரோடு அருகே இடையன்காட்டு வலசில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவிலில் திருப்பணி முடிந்த நிலையில், கும்பாபிஷேக விழா கடந்த, 5ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று ராஜகணபதி, ஞான பிரசன்னாம்பிகா, காளஹஸ்தீஸ்வரர் சன்னதி கோபுர கலசங்களுக்கு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்
பட்டது.
கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமி முன்னிலையில் கரூர் தேவசேனாபதி சிவம், அத்தாணி பாலாஜி, அச்சங்காடு கிருத்திகை பாலசுப்ரமணிய திருமடம் சக்திவேல் சிவம் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
சத்தியமங்கலத்தில்...
சத்தியமங்கலம், வடக்குபேட்டை ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. வால்மீகி குரு பீடாதிபதி ஜகத்குரு பிரசன்னா நந்தா சுவாமிஜி தலைமையில் நடந்தது. இன்று முதல் அக்., 9ம் தேதி வரை மண்டல பூஜை, 24 நாட்களுக்கு
நடக்கிறது.

