ADDED : ஆக 04, 2024 01:31 AM
கோபி, கோபி அருகே மொடச்சூரில், சனிக்கிழமை தோறும் கூடும் வாரச்சந்தை நடக்கிறது. சந்தை நுழைவு வாயிலில் இருந்து, அண்ணா நகர் வழிச்சாலையில், சிறு வியாபாரிகள் கடை போடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் அதே பகுதியில், 1.73 கோடி ரூபாயில் கூடாரத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டது. கடந்த மாதம், ௬ம் தேதி இந்த வணிக வளாகம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
ஆனால், பல வியாபாரிகள், வணிக வளாக கூடாரத்துக்குள் செல்லாமல், பழைய இடத்திலேயே வியாபாரம் செய்தனர். இதனால் வணிக வளாக கூடாரத்துக்குள் கடை வைத்திருப்போர் வருத்தம் தெரிவித்தனர். இதுகுறித்து நமது நாளிதழில் கடந்த வாரம் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக நேற்று கூடிய வாரச்சந்தையில், அனைத்து காய்கறி கடைகளும், வணிக வளாக கூடாரத்துக்குள் செயல்பட்டன.
ஆடிப்பெருக்கு விழா என்பதால் சில கடைக்காரர்கள் இந்த வாரம் கடை போட வரவில்லை என்று வியாபாரிகள் கூறினர்.