/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
3,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப கிராம சுகாதார செவிலியர் வலியுறுத்தல்

ADDED : ஆக 25, 2024 01:06 AM
ஈரோடு, ஆக. 25-
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் செந்தாமலர் தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாநில துணை தலைவர் பிரேமா ஆனந்தி, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். மாநில துணை தலைவர் சின்னபொண்ணு வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் உஷாராணி, மாநில பொருளாளர் கோவிந்தம்மாள் உட்பட பலர் பேசினர்.
சுகாதார செவிலியர் சார்ந்த பணியில், 3,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும். ஒரே இறையில் பணிபுரிகின்ற சுகாதார ஆய்வாளர்களுக்கு வழங்குவதுபோல, கிராம சுகாதார செவிலியர்களுக்கு கிரேடு-1 பதவி உயர்வு வழங்க வேண்டும். அவசியமான நேரங்களில் மட்டுமே கூகுள் மீட் வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சுகாதார துறை பெண் ஊழியர்களுக்கு உடை மாற்றும் அறை, கழிப்பிடம் அமைத்து தர வேண்டும். பணியில் இறந்த கிராம சுகாதார செவிலியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். களஞ்சியம் செயலி பதிவிறக்கம் செய்ய சொல்வதை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.