/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒருவாரமாக இருளில் தவிக்கும் கேர்மாளம் மலை கிராம மக்கள்
/
ஒருவாரமாக இருளில் தவிக்கும் கேர்மாளம் மலை கிராம மக்கள்
ஒருவாரமாக இருளில் தவிக்கும் கேர்மாளம் மலை கிராம மக்கள்
ஒருவாரமாக இருளில் தவிக்கும் கேர்மாளம் மலை கிராம மக்கள்
ADDED : ஜூலை 28, 2024 03:14 AM
சத்தியமங்கலம்: தாளவாடிமலையில் கேர்மாளம் அருகே ஜோகனுார், கானகரை, சிக்குன்சேபாளையம் பகுதியில், 20
நாட்களுக்கும் மேலாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
இதனால் வனப்பகுதி வழியாக செல்லும் மின் கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டுள்ளது. மூன்று வாரமாக மின்சாரமின்றி, பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமலும், மோட்டார் போட்டு குடி நீர் குடிக்க முடியாமலும் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மொபைல்போனுக்கு சார்ஜ் போட முடியாமல், கர்நாடக மாநிலத்-துக்கு சென்று கடைகளில் சார்ஜ் போடுகின்றனர். இரவில் மின் விளக்கு வெளிச்சம் இல்லாததால், விலங்குகள் ஊருக்குள் வருவ-தாகவும், மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது ஒரு புறமிருக்க ஜோகனுாரில் மின் கம்பத்தில் ஒயர்கள் அறுந்து தொங்கியபடி உள்ளது. ஒரு வாரமாக கேர்மாளத்தை சுற்-றியுள்ள, 30க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் இருளில் தவித்து வருகின்றனர். அதேசமயம் அறுந்து விழுந்த மின் கம்பி-களை ஊழியர்கள் அப்புறப்படுத்ததால், எர்த் அடிப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தைகள், முதிய-வர்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் நிலை உருவாகியுள்-ளது. கானகரை அருகே காரைதொட்டியில் நேற்று வீசிய சூறா-வளி காற்றில் ஐந்து வீடுகளின் கூரை துாக்கி வீசப்பட்டது.
அதேசமயம் பெரும்பாலான மின் கம்பங்கள் வனப்பகுதிக்குள் இருப்பதாலும், எந்த இடத்தில் மரங்கள் முறிந்து கம்பிகளின் மீது விழுகிறது என்பதை மின்வாரிய ஊழியர்கள் கண்டறிவதற்கே பல நாட்களாகிறது. மேலும் ஒருமுனை மின்சாரம் அடிக்கடி பீஸ் போவதால், பீஸ் போட்டாலும் நிற்பதில்லை என்று, மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

