/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பழுது சரிபார்க்க பொறியாளர் வருகை
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பழுது சரிபார்க்க பொறியாளர் வருகை
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பழுது சரிபார்க்க பொறியாளர் வருகை
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பழுது சரிபார்க்க பொறியாளர் வருகை
ADDED : ஏப் 09, 2024 01:48 AM
ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகளில், 146 ஓட்டுச்சாவடி மையங்களில், 1,688 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 172 ஓட்டுச்சாவடி பதற்றமானவை.
ஓட்டுப்பதிவுக்காக அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகத்துக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொகுதியில், 31 வேட்பாளர்கள் உள்ளதால், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று அல்லது நாளை மின்னணு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொறித்த ஓட்டுச்சீட்டு ஒட்டும் பணி நடக்கவுள்ளது. இச்சூழலில் இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால், அவற்றை உடனடியாக சரி செய்யும் பொருட்டு, பெல் நிறுவனத்தை சேர்ந்த, 12 பொறியாளர்கள் ஒரு சட்டசபை தொகுதிக்கு, இருவர் என குறிப்பிட்ட இடங்களில் தங்க வைக்கப்படுவர். அவசியப்படும் இடங்களுக்கு உடனடியாக சென்று பணியில் ஈடுபடுவர். இன்று ஈரோட்டுக்கு இவர்கள் வரவுள்ளனர்.