/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காதலர் தினத்தால் 'அலர்ட்'; வ.உ.சி., பூங்கா 'வெறிச்'
/
காதலர் தினத்தால் 'அலர்ட்'; வ.உ.சி., பூங்கா 'வெறிச்'
காதலர் தினத்தால் 'அலர்ட்'; வ.உ.சி., பூங்கா 'வெறிச்'
காதலர் தினத்தால் 'அலர்ட்'; வ.உ.சி., பூங்கா 'வெறிச்'
ADDED : பிப் 15, 2025 05:36 AM
ஈரோடு: உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்-டது. இந்த நாளில் பொது இடங்களில் சந்திப்பது, ஜோடியாக செல்வது, பரிசு பொருட்கள் பரிமாறுவது என பல ரகமான ஜோடிகள் உண்டு. ஈரோட்டில் காதலர் தினம் கொண்டாடுவோர், வ.உ.சி., பூங்காவுக்கு வருகை தருவதும், தங்கள் காதலை பகிர்ந்து கொள்வது வழக்கம். இதனால் எப்போதும் பிப்., 14ல் களைகட்டும். பஸ் ஸ்டாண்ட் பகுதி பூக்கடைகளில் ரோஜா உட்-பட பல்வேறு வகை பூக்கள், பூங்கொத்துக்களை வாங்கி செல்-வார்கள்.
கடந்த சில ஆண்டாக காதலர்களை சில அமைப்பினர் மிரட்-டியும், தாலி கட்ட வேண்டும் என்று தாலியை கொடுத்து தொல்லை செய்தும், வீடியோ, போட்டோ பதிவு செய்தனர். ஒரு சில இடங்களில் நாய், கழுதைக்கு திருமணம் செய்து காதலர்-களை அசிங்கப்படுத்தியதால் தகராறும் தொடர்ந்தது. இதனால் நேற்று காலை, 8:00 மணி முதல் வ.உ.சி., பூங்கா வளாகத்தை சுற்றி டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையில் போலீஸ் பாது-காப்பு போடப்பட்டது. சாதாரண பொதுமக்கள் தவிர, காதலர்க-ளாக வருவோரையும், அமைப்பு ரீதியில் கூட்டமாக வந்தவர்க-ளையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் பூங்கா வரை சென்ற பல காதலர்கள், உள்ளே செல்ல முடியாமல் திரும்-பினர். பெரும்பாலானவர்கள் 'மல்டி பிளக்ஸ்' தியேட்டர்களிலும், ஐஸ்கிரீம் பார்லர், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் தஞ்சமடைந்தனர். இதனால் வழக்கமான கோலாகலம், பதற்ற-மில்லாமல் காதலர் தினம் கழிந்தது.