/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வி.வி.சி.ஆர்., முருகேசனார் செங்குந்தர் மகளிர் பள்ளி அபாரம்
/
வி.வி.சி.ஆர்., முருகேசனார் செங்குந்தர் மகளிர் பள்ளி அபாரம்
வி.வி.சி.ஆர்., முருகேசனார் செங்குந்தர் மகளிர் பள்ளி அபாரம்
வி.வி.சி.ஆர்., முருகேசனார் செங்குந்தர் மகளிர் பள்ளி அபாரம்
ADDED : மே 11, 2024 07:23 AM
ஈரோடு : ஈரோடு வி.வி.சி.ஆர்., முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகள் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றனர்.
மாணவி தாருகா, 482 எடுத்து பள்ளியில் முதலிடம் பெற்றார். சஹானாஸ்ரீ, 471 எடுத்து இரண்டாமிடம், மாணவி ஷாலிகா, நந்தினி ஆகியோர், 468 எடுத்து மூன்றாமிடம் பெற்றனர். 56 மாணவிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணித பாடத்தில் இரண்டு மாணவிகள் 100/100 மதிப்பெண் எடுத்தனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவியர், ஆசிரியைகள், பள்ளி தலைமையாசிரியை கவிதா ஆகியோரை, பள்ளித் தலைவர் சண்முகவடிவேல், செயலாளர் சிவானந்தன், தாளாளர் கணேசன், பொருளாளர் ரவிச்சந்திரன், மீனாட்சி சுந்தரனார் பள்ளி தாளாளர் கமலக்கண்ணன்
மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், வாழ்த்தி பாராட்டினர்.