/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி ஆற்றில் தண்ணீர் திருட்டு 30 மின் இணைப்பை துண்டிக்க பரிந்துரை
/
பவானி ஆற்றில் தண்ணீர் திருட்டு 30 மின் இணைப்பை துண்டிக்க பரிந்துரை
பவானி ஆற்றில் தண்ணீர் திருட்டு 30 மின் இணைப்பை துண்டிக்க பரிந்துரை
பவானி ஆற்றில் தண்ணீர் திருட்டு 30 மின் இணைப்பை துண்டிக்க பரிந்துரை
ADDED : செப் 04, 2024 08:28 PM
ஈரோடு:ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை, 70 கி.மீ., துாரத்துக்கு பவானி ஆறு பாய்கிறது. ஆற்றின் இரு புறங்களிலும், குறைந்த மின் அழுத்த இணைப்பு பெற்று, ராட்சத மின் மோட்டார்களை அமைத்து, குழாய்கள் மூலம் சட்ட விரோதமாக, பல கி.மீ., துாரத்துக்கு தண்ணீர் எடுத்து சென்று விவசாயம், ஆலை பயன்பாடு மற்றும் மினரல் வாட்டராக மாற்றி சிலர் தண்ணீர் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், அதன் மூலம் பயன்பெறும் ஆயக்கட்டுதாரர்களுக்கு பயன் தராமல் போவதால், விவசாயிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
இதை தடுக்க, கலெக்டர் தலைமையில், ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இக்குழுவின் ஆய்வில், 30க்கும் மேற்பட்ட விவசாய, விவசாய பயன்பாடு இல்லாத தண்ணீர் திருட்டு, சட்ட விரோத தண்ணீர் உறிஞ்சும் இடங்களை கண்டறிந்தனர்.
இந்த மின் இணைப்புகளை துண்டிக்க, பவானிசாகர் அணை செயற்பொறியாளர் தரப்பில் மின்வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில், மின் இணைப்புகளை துண்டித்து, தண்ணீர் திருட்டை தடுக்க, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.