/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நமக்கு நாமே திட்டத்தில் தேர்கள் நிறுத்துமிடம்
/
நமக்கு நாமே திட்டத்தில் தேர்கள் நிறுத்துமிடம்
ADDED : செப் 06, 2024 01:27 AM
ஈரோடு, செப். 6-
ஈரோட்டில் ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்துாரி அரங்கநாதர் கோவில் மற்றும் மகிமாலீஸ்வரர் கோவில்களுக்கு சொந்தமான தேர்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இந்நிலையில் நமக்கு நாமே திட்டத்தில் மாநகராட்சி மற்றும் மக்கள் பங்களிப்புடன் தேர் நிறுத்துமிடம் கட்டிக்கொள்ள மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.
இதன்படி ஈஸ்வரன் கோவில் அருகே காமராஜர் வீதியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளியின், சேதமான பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, சுற்றுச்சுவருடன் சிறு அளவிலான விளையாட்டு மைதானமும், விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது. மீதி இடத்தில் கோவிலின் முன்புறம் மூன்று தேர்களை நிறுத்த கட்டுமான பணி தொடங்கியது. தற்போது, 90 சதவீத பணி முடிந்துள்ளது.