ADDED : செப் 06, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:விடுதலை
சிறுத்தைகள் கட்சி கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தின்
ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி பொள்ளாச்சி ஆகிய மேற்கு மண்டலத்தின்
மாநில துணை செயலாளர் அறிமுக கூட்டம், ஈரோட்டில் நடந்தது.
திருப்பூர் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை வகித்தார். சிறப்பு
விருந்தினராக கட்சி கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தின்
மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்முரசு கலந்து கொண்டார். மேற்கு
மண்டலத்தில் ஒரு மண்டலத்துக்கு இரு திருமா பயிலரங்கம் உருவாக்க
வேண்டும். நீலகிரியில் அரசு பொறியியல் கல்லுாரி (கூடலுார்) கொண்டுவர
வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
