/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'இப்படி நடந்தால் எப்படி?' ஆர்.டி.ஓ.,விடம் பா.ஜ., புகார்
/
'இப்படி நடந்தால் எப்படி?' ஆர்.டி.ஓ.,விடம் பா.ஜ., புகார்
'இப்படி நடந்தால் எப்படி?' ஆர்.டி.ஓ.,விடம் பா.ஜ., புகார்
'இப்படி நடந்தால் எப்படி?' ஆர்.டி.ஓ.,விடம் பா.ஜ., புகார்
ADDED : ஜூன் 28, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரம் நகர பா.ஜ., நகர தலைவர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளரிடம் மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: சில மாதங்களாக, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க பதிவு செய்பவர்களுக்கு, சரியான நேரத்தில் புதுப்பித்து தரப்படுவதில்லை. கால தாமதத்தால் மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காணாவிட்டால், பா.ஜ., சார்பில் மக்களை திரட்டி, வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.