/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'வன விலங்கு சரணாலயத்தால் வனக்குற்றங்கள் குறையும்'
/
'வன விலங்கு சரணாலயத்தால் வனக்குற்றங்கள் குறையும்'
ADDED : ஆக 07, 2024 01:23 AM
ஈரோடு:''ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் பகுதியில் பெரியார் வனவிலங்குகள் சரணாலயம் அமைக்கப்படும்போது, வனக்குற்றங்கள் முழுமையாக குறையும்,'' என, ஈரோடு மாவட்ட வன அலுவலர் குமிளி அப்பாலே நாயுடு தெரிவித்தார்.
ஈரோட்டில், மேலும் அவர் கூறியதாவது:
ஈரோடு மாவட்ட வனச்சரகத்துக்கு உட்பட்ட அந்தியூர், கோபி, பவானி தாலுகா பகுதியில், 80,000 ஹெக்டேர் பரப்பில் பெரியார் வன விலங்குகள் சரணாலயம் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே, புலிகள் சரணாலயம் பகுதியை ஒட்டி இவை அமைந்துள்ளதால், ஏற்கனவே உள்ள நடைமுறை, வனத்துறை சட்டங்கள் அமலில் இருக்கும். இதனால் மனித - விலங்குகள் மோதல் கட்டுப்படும். விளைநிலங்களில் விலங்குகளால் ஏற்படும் சேதம் குறையும். வனக்குற்றங்கள் முழுமையாக கட்டுக்குள் வரும்.
வனத்துக்குள் தீ விபத்து ஏற்படுவதும் தடுக்கப்படும். சந்தன மரங்கள், தேக்கு போன்ற விலை உயர்ந்து மரங்களை வெட்டி கடத்துவது தடுக்கப்படும். வனச்சரணாலயத்தால் வனத்திலும், வனத்தை ஒட்டியும் வாழும் பழங்குடியினர் மக்களின் உரிமைகள் பாதிக்கப்படாது. புதிய கட்டுப்பாடு விதிக்கப்படாது.
இவ்வாறு கூறினார்.