/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'இலவச பஸ்ஸில் அவமரியாதை' உதயநிதியிடம் குமுறிய பெண்
/
'இலவச பஸ்ஸில் அவமரியாதை' உதயநிதியிடம் குமுறிய பெண்
'இலவச பஸ்ஸில் அவமரியாதை' உதயநிதியிடம் குமுறிய பெண்
'இலவச பஸ்ஸில் அவமரியாதை' உதயநிதியிடம் குமுறிய பெண்
ADDED : ஏப் 17, 2024 12:21 PM
தாராபுரம்: ஈரோடு லோக்சபா தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி தாராபுரத்தில் நேற்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்ற தி.மு.க., வேட்பாளர் கயல்விழி, தற்போது அமைச்சராகி, அரசு கலைக் கல்லுாரி, அரசு மருத்துவமனை விரிவாக்கம் உள்பட பல்வேறு திட்டங்களை, தாராபுரத்திற்கு செய்துள்ளார். கடந்த, 10 ஆண்டு கால ஆட்சியில், தமிழகத்துக்கு மோடி எதை செய்தார்? என்றார்.
மேலும், மகளிருக்கு இலவச பஸ் பயணம் குறித்து பெருமிதமாக குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட ஒரு பெண், 'இலவச பஸ்சில் செல்லும்போது, ஓட்டுனர், நடத்துனர் மரியாதை குறைவாக பெண்களை பேசுகின்றனர்' என்றார். இதனால் உதயநிதி அதிர்ச்சி அடைந்தார். எந்த வழித்தட பஸ் என கேட்டு, இதுகுறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.