/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டப்பகலில் குழந்தையுடன் வீட்டில் திருடிய பெண்கள்
/
பட்டப்பகலில் குழந்தையுடன் வீட்டில் திருடிய பெண்கள்
பட்டப்பகலில் குழந்தையுடன் வீட்டில் திருடிய பெண்கள்
பட்டப்பகலில் குழந்தையுடன் வீட்டில் திருடிய பெண்கள்
ADDED : ஆக 17, 2024 03:42 AM
புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அருகே தயிர்பள்ளத்தை சேர்ந்தவர் கணேசன், 50; அதே பகுதியில் தோட்டத்து வீட்டில் பப்பாளியில் இருந்து மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை பொருட்கள் வாங்க வெளியே சென்றார். மதியம் திரும்பி வந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த கேபிள், ஒயர் மற்றும் இரும்பு உள்ளிட்ட தளவாட பொருட்கள் திருட்டு போனது தெரிந்தது. அங்கு பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.
இதில் இரண்டு பெண்கள் வீட்டின் கதவை திறக்கின்றனர். ஒரு பெண் அங்கு வைக்கப்பட்டிருந்த கேபிள், ஸ்விட்ச் பாக்ஸ், இரும்பு பொருட்கள் உள்ளிட்ட தளவாட பொருட்களை தான் கொண்டுவந்த பை மற்றும் சேலைக்குள் மறைத்து எடுத்து செல்கிறார். அதை தொடர்ந்து கைக்குழந்தையுடன் வந்த மற்றொரு பெண் என நான்கு பெண்கள் வெளியேறுகின்றனர். கணேசன் புகாரின்படி பவானிசாகர் போலீசார், பெண் களவாணிகளை தேடி வருகின்றனர்.

