ADDED : ஏப் 05, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 237 ஓட்டுச்சாவடிகள்
உள்ளன.
தொகுதி வாக்காளர்களுக்கு கடந்த, 1ம் தேதி முதல் 'பூத் சிலிப்'
வழங்கும் பணி தொடங்கியுள்ளது. வரும், 16ம் தேதி வரை இப்பணி நடக்கும்.
இதற்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ஒருவர் என, 237 பேர்
நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக
சென்று முகவரி சரிபார்த்து, 'பூத் சிலிப்' வழங்கும் பணி நடந்து
வருவதாக, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

