/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிசியோதெரபி கல்லுாரியில் உலக சுற்றுச்சூழல் தினம்
/
பிசியோதெரபி கல்லுாரியில் உலக சுற்றுச்சூழல் தினம்
ADDED : ஜூன் 09, 2024 04:01 AM
ஈரோடு: நந்தா பிசியோதெரபி கல்லுாரியில், உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீநந்தா அறக்கட்டளை தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். இத்தினத்தில், 210 மரக்கன்றுகளை தங்களது வளாகத்திலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும் நட்டு, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே மாணவர்கள் ஏற்படுத்தினர். முன்னதாக கல்லுாரி உதவி பேராசிரியரும், விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் ஜனனி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் மணிவண்ணன், மனிதன் மரங்களை தன் கண்களாக கொண்டு பாதுகாத்து, தன் கடமையாக கொண்டு வளர்த்திட பாடுபட வேண்டும் என்றார். இது தொடர்பாக மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டி நடத்தி, பரிசு வழங்கப்பட்டது.
ஸ்ரீநந்தா அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதிப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், விழா குழுவினருக்கு, வாழ்த்து தெரிவித்தனர்.