/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாராபுரத்தில் நாளை உலக சித்தர் மாநாடு
/
தாராபுரத்தில் நாளை உலக சித்தர் மாநாடு
ADDED : ஜூலை 26, 2024 02:37 AM
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த உப்புத்துறை பாளையத்தில் ஒரு மண்ட-பத்தில், இரண்டு நாள் உலக சித்தர்கள் மாநாடு நாளை தொடங்கு-கிறது.
முதல் நாளில் கணபதி ஹோமம், கொடியேற்றம் மற்றும் சொற்பொழிவு நடக்கிறது. சித்தர்கள் பெரிதும் வலியுறுத்தியது உள்ள துாய்மையா? உடல் துாய்மையா? எனும் பட்டிமன்றம் நடக்கிறது. மாலையில் முளைப்பாரி எடுத்தல், 1,008 திருவி-ளக்கு பூஜை நடக்கிறது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி பங்-கேற்கின்றனர். நாளை மறுநாள் நடக்கும் நிகழ்ச்சிகளில், பா.ஜ., மாநில பொது செயலாளர் சீனிவாசன், தமிழகமெங்கும் இருந்து சிவனடியார்கள், மடாதிபதிகள், துறவிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் ஐந்து லட்சம் ருத்ராட்சங்களால் உருவாக்கப்-பட்ட சிவலிங்கத்துக்கு, யாகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடு-களை உலக சித்தர்கள் ஞானபீட தலைவர் ரத்னமாணிக்கம், பதிணென் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய நிறுவனர் கண-பதி குடும்பனார் மற்றும் சிவனடியார்கள், தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர்.