ADDED : ஜூலை 22, 2024 12:35 PM
ஈரோடு: ஈரோடு, வைராபாளையம், அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஜே.சி.பி., ஆப்பரேட்டர். இவரின் மனைவி நர்மதா, 38; கணவனுடன் தகராறு ஏற்படும்போதெல்லாம், தாய் வீட்டுக்கு சென்று விடுவார்.
பிறகு மணிகண்டன் சமாதானம் பேசி அழைத்து வருவது வாடிக்கை. கடந்த, 19ம் தேதி காலை வழக்கம்போல் ஏற்பட்ட தகராறால், வீட்டில் இருந்து நர்மதா வெளியேறி விட்டார். ஆனால், இந்த முறை, தாய் வீட்டுக்கு செல்லவில்லை. மணிகண்டன் புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார், நர்மதாவை தேடி வருகின்றனர்.
திங்களூரை சேர்ந்த குருநாதன் மகள் ரோகிணி, 19; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 18ம் தேதி, கல்லுாரி செல்லாமல் வீட்டில் இருந்த ரோகிணி மாயமானார். உறவினர், தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்படி திங்களூர் போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.