/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு வர்த்தகம்
/
கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு வர்த்தகம்
ADDED : மார் 01, 2024 02:03 AM
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டியில்,
புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கால்நடை சந்தை கூடுகிறது. இரண்டு
நாட்களாக கூடிய சந்தைக்கு, 40 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 80
கன்றுகள் 200 ஜெர்சி மாடுகளை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு
வந்தனர். எருமைகள் 18 முதல் 35 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு, 24
முதல், 42 ஆயிரம் ரூபாய், ஜெர்சி, 22 ஆயிரம் முதல், 48 ஆயிரம், சிந்து,16
ஆயிரம் முதல், 42 ஆயிரம், நாட்டுமாடு, 40 முதல், 72 ஆயிரம் ரூபாய் வரை,
விற்றது. வளர்ப்பு கன்றுகள் 5,000 முதல், 14 ஆயிரம் வரை
விற்பனையானது. கர்நாடக,கேரளா மாநில வியாபாரிகள் கால்நடைகளை
வாங்கிச்சென்றனர். அதேபோல்,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்
இருந்து, 200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10
கிலோ எடை கொண்ட வெள்ளாடு ஒன்று,7000 ரூபாய் வரையும்,10 கிலோ வரையுள்ள
செம்மறி ஆடுகள் 6500 ரூபாய் வரையும் விற்பனையானது. அனைத்து
கால்நடைகளும் 1 கோடி ரூபாய்க்கு விற்றதாக, வியாபாரிகள்
தெரிவித்தனர்.
* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று
நடந்தது. இதில், 5,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் மதிப்பில், 80
கன்றுகள், 25,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 300 எருமை
மாடுகள், 25,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகள்,
75,000 ரூபாய்க்கு மேலான விலையில், 100 கலப்பின மாடுகள் வரத்தானது. 90
சதவீத மாடுகள் விற்பனையாகின.

