/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
30,௦௦௦ பேருக்கு ௧ கொசு மருந்து தெளிப்பு இயந்திரம்
/
30,௦௦௦ பேருக்கு ௧ கொசு மருந்து தெளிப்பு இயந்திரம்
ADDED : ஜன 29, 2024 12:27 PM
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் உள்ள, 18 வார்டுகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவற்றில், 200க்கும் மேற்பட்ட தெருக்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் வடிகால் அமைக்கப்
பட்டுள்ளது.
பெரும்பாலான தெருக்களில் வடிகால் சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் தேங்கி, கொசு அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. கொசுக்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மூலம் கொசு மருந்து தெளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், 18 வார்டுகளுக்கும் ஒரு கொசு மருந்து இயந்திரம் மட்டுமே உள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், நகராட்சி நிர்வாகம் அளித்த பதிலால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நகராட்சி, 11வது வார்டு, சரோஜினி வீதியை சேர்ந்த கபில்தேவ், நகராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் இயந்திரத்தின் எண்ணிக்கை, இயந்திரம் சர்வீஸ் செய்த நாள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு, நகராட்சி நிர்வாகம் அளித்த பதிலில், 'நகராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் இயந்திரம் ஒன்று உள்ளது. அது, 2023 ஏப்., 6ம் தேதி சர்வீஸ் செய்யப்பட்டது' என்றும் பதில் அளிக்கப்
பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: நகராட்சி வார்டுகளில் கொசுத்தொல்லை அதிகரித்த நிலையில்,
கொசு மருந்து பெயரளவுக்கே அடிக்கப்படுகிறது. மேலும், 18 வார்டுகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு இயந்திரம் ஒன்று மட்டுமே இருப்பது, அதிர்ச்சியாக உள்ளது. கூடுதலாக கொசு மருந்து தெளிக்கும் இயந்திரம் வாங்கி, கொசுத்தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்ற
வேண்டும்.
இவ்வாறு கூறினர்.