/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
10ம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில்5 மாணவிகள் மாயம்
/
10ம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில்5 மாணவிகள் மாயம்
10ம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில்5 மாணவிகள் மாயம்
10ம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில்5 மாணவிகள் மாயம்
ADDED : ஏப் 16, 2025 01:08 AM
10ம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில்5 மாணவிகள் மாயம்
பவானி:ஈரோடு மாவட்டம் சித்தோட்டை சேர்ந்த ஒரு சிறுமி, பவானியை சேர்ந்த நான்கு சிறுமிகள் என ஐந்து பேர், பத்தாம் வகுப்பு படிக்கின்றனர்.
நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தது. தேர்வு எழுதிவிட்டு வந்த ஐந்து மாணவியரும், வீடு திரும்பவில்லை. ஐந்து பேரும் ஒன்றாக மாயமாகியுள்ளனர். நேற்றிரவு, 9:00 மணியாகியும் வீட்டுக்கு வராததால், மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மகள்களை கண்டுபிடித்து தருமாறு, பவானி போலீசில் புகார் செய்தனர். மாணவிகள் கொண்டு சென்ற, மொபைல் எண்களை வைத்து டிராக் செய்ததில், திருச்சியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மாணவிகளை தேடி திருச்சிக்கு பவானி போலீசார் விரைந்துள்ளனர்.