/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு பத்து பேர் விண்ணப்பம்
/
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு பத்து பேர் விண்ணப்பம்
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு பத்து பேர் விண்ணப்பம்
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு பத்து பேர் விண்ணப்பம்
ADDED : ஆக 01, 2024 02:13 AM
ஈரோடு: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்த, 10 பேரில் ஒருவர் மட்டும் மாநில குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆண்டுதோறும், தேசிய அளவில் ஆசிரியர் தினமான செப்.,5ல் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு, ஈரோடு மாவட்டத்தில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, 10 பேர் விண்-ணப்பித்து இருந்தனர். இதில் ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்-பட்டது. மீதமுள்ள ஒன்பது பேரில் மாவட்ட தேர்வு குழுவினர், மூன்று பேரை மட்டும் தேர்வு செய்து மாநில குழுவுக்கு பரிந்-துரை செய்தது.
தேர்வு செய்யப்பட்ட மூவரும் மாநில குழு முன் ஆஜராகினர். மாநில குழுவும் தேர்வு நடத்தியது. இதில் ஒரு ஆசிரியர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போல், பிற மாவட்டங்களில் இருந்தும் தேர்வாகும் ஆசிரியர்கள் விண்ணப்பம், மத்திய குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு நல்லாசிரியர் தேர்வு செய்யப்படுவர் என, பள்ளி கல்வி துறையினர் தெரிவித்-தனர்.