/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
10 லட்சம் நில உட்பிரிவு பதிவு: விவசாயிகளுக்கு வேண்டுகோள்
/
10 லட்சம் நில உட்பிரிவு பதிவு: விவசாயிகளுக்கு வேண்டுகோள்
10 லட்சம் நில உட்பிரிவு பதிவு: விவசாயிகளுக்கு வேண்டுகோள்
10 லட்சம் நில உட்பிரிவு பதிவு: விவசாயிகளுக்கு வேண்டுகோள்
ADDED : ஜூலை 13, 2025 01:26 AM
ஈரோடு, 'ஈரோடு
மாவட்டத்தில், 10 லட்சம் நில உட்பிரிவுகளை பதிவு செய்ய வேண்டும்'
என்று, வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி, விவசாயிகளுக்கு
வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பி.எம்.கிசான்
திட்டம், பயிர் கடன் உட்பட அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தடையின்றி
பெற, நில விபரங்களை 'அடுக்ககம் திட்டத்தில்' பதிவு செய்து, தனித்துவ
அடையாள எண் பெற வேண்டும். மாவட்ட அளவில் விளைநிலங்கள் உட்பட வேளாண்
பயன்பாட்டில், 11 லட்சம் நில உட்பிரிவுகள் உள்ளன. இதுவரை ஒரு லட்சம்
நில உட்பிரிவுகள் மட்டுமே, 93,793 விவசாயிகளால் பதிவு
செய்யப்பட்டு, தனித்துவ அடையாள எண் பெறப்பட்டுள்ளது.
இன்னும், 10
லட்சம் நில உட்பிரிவுகளில் அரசு நிலங்கள், வணிக நிறுவன நிலங்கள், இதர
பயன்பாட்டில் உள்ள நிலங்கள் நீங்கலாக உள்ள விவசாய நில உடமைதாரர்கள்,
கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்து தனித்துவ எண் பெற்றால்
மட்டுமே, அரசின் திட்ட பயன்களை தொடர்ந்து பெற முடியும். இவ்வாறு கூறினார்.