/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பயணிகள் காயம்
/
ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பயணிகள் காயம்
ADDED : மே 09, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, கேரளா- மாநிலம் திருச்சூரில் இருந்து பெங்களூருக்கு, தனியார் ஆம்னி பஸ் நேற்று முன் தினம் இரவு புறப்பட்டது. பெருந்துறையை அடுத்த ஓலப்பாளையம் பிரிவு அருகே, நேற்று அதிகாலை வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில், ௧௦ பயணிகள் லேசான காயமடைந்தனர். அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பெருந்துறை போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.