மலிவு விலையில் அரிசி விற்பனை 10 கடைகளின் பெயர் வெளியீடு
மலிவு விலையில் அரிசி விற்பனை 10 கடைகளின் பெயர் வெளியீடு
ADDED : அக் 22, 2026 07:01 AM
ஈரோடு,:ஈரோடு
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சந்தையில் உயர்ந்து வரும்
அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு, கூட்டுறவு பண்டக
சாலை கடைகள் மூலம் கிலோ, 30 ரூபாய் என்ற மானிய விலையில் சன்னரக அரிசி
வினியோகிக்கும் திட்டத்தை துவங்கி உள்ளது. ஒவ்வொரு நுகர்வோரும்
அதிகபட்சம், 5 கிலோ வரை சன்ன ரக அரிசி பெறலாம்.ஈரோடு பஸ்
ஸ்டாண்டில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு விற்பனை பண்டக சாலை,
பெருந்துறை மருத்துவக் கல்லுாரி சிந்தாமணி கிளை, பவானி புதிய பஸ்
ஸ்டாண்ட் எதிரே உள்ள சிந்தாமணி கிளை, கோபி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள
சிந்தாமணி கிளை, பண்ணாரி சாலையில் உள்ள சத்தி சிந்தாமணி கிளை,
புன்செய் புளியம்பட்டி தொடக்க கூட்டுறவு பண்டக சாலை, பண்ணாரி அம்மன்
சர்க்கரை ஆலை பணியாளர்கள் தொடக்க கூட்டுறவு பண்டகசாலை,
அந்தியூர் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள தொடக்க கூட்டுறவு பண்டக
சாலை, கோபி தொடக்க கூட்டுறவு பண்டக சாலை, சத்தி சர்க்கரை தொடக்க
கூட்டுறவு பண்டகசாலை என, 10 இடங்களில் விற்பனை
செய்யப்படுகிறது. விற்பனையில் குறைபாடு, புகார் இருந்தால், 73387
20703 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
