/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
100 நாள் தொழிலாளர் போராட்டம் ரத்து
/
100 நாள் தொழிலாளர் போராட்டம் ரத்து
ADDED : நவ 11, 2025 02:22 AM
சத்தியமங்கலம் சத்தியமங்கலம், பவானிசாகர் மற்றும் தாளவாடி யூனியன்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நான்கு மாதமாக பணி வழங்கவில்லை. பணி வழங்க வலியுறுத்தி நவ., ௧௧ம் தேதி மூன்று யூனியன் அலுவலகம் முன்பும் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் சத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் உதவி திட்ட அலுவலர் ராஜலட்சுமி தலைமையில், அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடந்ததது.
இதில் மூன்று பி.டி.ஓ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம், ஊராட்சி ஒன்றிய அலுவலர், சங்க நிர்வாகிகள், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒதுக்கப்பட்ட நிதிக்கு தகுந்தபடி வரும், ௧௩ம் தேதி முதல் ஊராட்சிகளில் பணி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதனால் இன்று நடக்கவிருந்த முற்றுகை போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

