/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடத்தலுக்காக அரிசி ஆலையில் பதுக்கிய௪0 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 5 பேர் கைது

ADDED : ஏப் 26, 2025 01:13 AM
பெருந்துறை:பெருந்துறை அருகே வெளிமாநிலத்துக்கு கடத்தவிருந்த, 40 டன் ரேஷன் அரிசி, 2 லாரிகளை பறிமுதல் செய்யப்பட்டு, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு அருகே வாவிக்கடை, பிச்சாண்டம்பாளையத்தில் எஸ்.பி.ஐஸ்வர்யா மார்டன் ரைஸ்மில், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் செயல்படுகிறது. ரேஷன் கடை அரிசியை, இங்கு இருப்பு வைத்து, வெளி மாநிலத்துக்கு கடத்தவுள்ளதாக, கோவையில் உள்ள ஓ.சி.ஐ.யூ., (உளவுப்பிரிவு தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு)க்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் கமலி மற்றும் காவலர்கள், ரைஸ் மில்லில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அங்கு, 40 டன் ரேஷன் அரிசி கடத்தலுக்காக தயாராக இருந்ததுடன், 2 லாரிகளும் நிறுத்தி வைத்திருந்ததை உறுதி செய்தனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதாவுக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் அரிசி மற்றும் லாரியை ஒப்படைத்தனர்.
அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், காவிரி நகர் பாபு, 37; பவானி, ஜானகிராமன், பிரகாஷ், தர்மபுரி மாவட்டம் சிவன், கார்த்திக் என ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். ரைஸ் மில் உரிமையாளரான பெருந்துறையை சேர்ந்த சம்பத்குமார் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.