/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சஷ்டி விழாவுக்கு காப்பு கட்டிய 10 ஆயிரம் பக்தர்கள் கோபி முருகன் கோவில்களில் கோலாகலம்

ADDED : நவ 03, 2024 02:46 AM
கோபி: கந்தசஷ்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, கோபி பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், காப்பு கட்டுதல் நிகழ்வு கோலாகலமாக நடந்தது.
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள பச்சமலை முருகன் கோவிலில், நடப்பாண்டு கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜை-யுடன் நேற்று துவங்கியது. சஷ்டி விழாவில் விரதம் இருக்கும் பக்-தர்கள், கோவிலுக்கு காலை முதலே காப்பு கட்டிக்கொள்ள வரத்தொடங்கினர்.இதனால் கோவில் வெளிப்பிரகார மண்டபத்தில், பத்து சிவாச்சா-ரியார்கள் தயாராக இருந்தனர். காலை, 9:00 மணிக்கு காப்பு கட்டும் பணி தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் வந்ததால், பச்சமலை சாலை, கோவில் அடிவாரம், மலை அடிவாரம், மலை வழித்தடம், மடப்பள்ளி, கோசாலை உள்ளிட்ட பகுதியில் தங்கள் கார் மற்றும் டூவீலர்களை நிறுத்தி சென்றனர்.
இதனால் பிற வாகனங்கள் இடம்பெயர வழியின்றி கடும் போக்-குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்-தர்கள், காப்பு கட்டி கொண்டதால், பச்சமலை முருகன் கோவிலில் கூட்டம் அலைமோதியது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலிலும் சஷ்டி, சூரசம்ஹார விழா தொடங்கியது. இங்கும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி, சஷ்டி விரதம் தொடங்-கினர்.