/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் 101 டிகிரி வெயில்மக்கள் பரிதவிப்பு
/
ஈரோட்டில் 101 டிகிரி வெயில்மக்கள் பரிதவிப்பு
ADDED : ஏப் 19, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு::ஈரோட்டில் நேற்று காலை, 7:00 முதல் கடும் வெயில் வாட்டியது. அவ்வப்போது லேசான மேக மூட்டமாக காணப்பட்டாலும், கடுமையான வெப்பம் நிலவியது. காலை, 11:00 முதல் மாலை, 4:30 மணி வரை தொடர்ந்து வெயில் வாட்டியது. மாலை, 5:15 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் மேக மூட்டமாக காணப்பட்டது.
கடந்த, 24 மணி நேர நிலவரப்படி ஈரோட்டில், 101 டிகிரி வெயில் வாட்டியது. பிற பகுதிகளை ஒப்பிடுகையில் 2.1 முதல், 4.2 டிகிரி வரை வெயிலின் அளவு கூடுதலாக காணப்பட்டது. நேற்றைய வெப்பத்தின் தாக்கத்தால், மக்கள் அவதிப்பட்டனர்.