/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
83,457 விவசாயிகளுக்கு ரூ.1,069 கோடி கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கல்
/
83,457 விவசாயிகளுக்கு ரூ.1,069 கோடி கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கல்
83,457 விவசாயிகளுக்கு ரூ.1,069 கோடி கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கல்
83,457 விவசாயிகளுக்கு ரூ.1,069 கோடி கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கல்
ADDED : நவ 01, 2024 01:24 AM
83,457 விவசாயிகளுக்கு ரூ.1,069 கோடி
கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்கல்
ஈரோடு, நவ. 1-
ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பாண்டு, 1,069 கோடி ரூபாய் வரை பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியின் கீழ், 276 கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது. தவிர மாவட்ட, நகர வங்கிகள் தனியாக செயல்படுகிறது. மேலும், நுகர்வோருக்கு குறைந்த விலையில் நுகர்பொருட்கள் வழங்க, ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையாக சிந்தாமணியையும் செயல்படுத்தி வருகிறது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு பாலமாக, ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுத்தி, மஞ்சளை ஏல முறை விற்பனை செய்கிறது. அங்கு, 1 கோடி ரூபாயில் மஞ்சளை தரம் பிரித்து விற்பனை செய்யும் வகையிலான இயந்திரத்தை, 1 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கி நிறுவி உள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு தரமான மஞ்சளுக்கு கூடுதல் விலை உறுதி செய்யப்படுகிறது.
கூட்டுறவு வங்கிகளின் பிரதான பணிகளான பயிர் கடன் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி, கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறியதாவது:
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயித்து பயிர் கடன், குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. பயிர் கடன் வழங்கும் விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு செய்தும் செய்து தரப்படுகிறது.
இதன்படி இம்மாவட்டத்தில் நடப்பாண்டு, 83,457 விவசாயிகளுக்கு, 1,069 கோடி ரூபாய்க்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
அதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மட்டும் பயிர் கடனாக, 2.91 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயம் சார்ந்த விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் கூட்டுறவு துறை மூலம் ஆடு, மாடு, கோழி, மீன் வளர்க்கும் அமைப்புகளை ஏற்படுத்தவும், வட்டி இல்லா நடைமுறை மூலதன கடன் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி நடப்பு நிதியாண்டில், 6,778 விவசாயிகளுக்கு, 46.74 கோடி ரூபாய் கடனும், 160 மாற்றுத்திறனாளிகளுக்கு, 66 லட்சம் ரூபாய் கடனுதவியும், 66 மகளிருக்கு, 26 லட்சம் ரூபாய் கடனும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரக உட்கட்டமைப்பு நிதி மற்றும் கிடங்கு உட்கட்டமைப்பு நிதியின் கீழ், 222 கிடங்குகள், 37,700 டன் கொள்ளளவு கொண்டு அமைக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.