/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு துவக்கம்
/
10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு துவக்கம்
ADDED : ஜூலை 04, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பிளஸ் 1 துணைத்தேர்வு இன்று துவங்கி வரும், 11ம் தேதி வரை நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில்-94, ஈரோடு செங்குந்தர் பள்ளியில்- 153, கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளியில்-105, சத்தி பெண்கள்
மேல்நிலை பள்ளியில்-12, பவானி பெண்கள் மேல்நிலை பள்ளியில்-22, ஈரோடு கலைமகள் கல்வி நிலைய பள்ளியில்- 39, கோபி வைர விழா மேல்நிலை பள்ளியில்-6 பேர் என, 431 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதேபோல் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வும் இன்று தொடங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வெழுத, ௨,௧௮௯ பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஏழு மையம் அமைக்கப்பட்டுள்ளது.