/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கிளை சிறையில் 11 பேருக்கு காமாலை அறிகுறி
/
ஈரோடு கிளை சிறையில் 11 பேருக்கு காமாலை அறிகுறி
ADDED : செப் 20, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, செப். 20-
ஈரோடு கிளை சிறை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ளது. இங்கு வழக்குகளில் தொடர்புடைய, 53 கைதிகள் உள்ளனர். இவர்களை ஈரோடு அரசு மருத்துவமனை குழுவினர் அவ்வப்போது பரிசோதனை செய்வது
வழக்கம்.
இந்நிலையில் மருத்துவ சோதனையில், 11 கைதிகளுக்கு மஞ்சள் காமாலைக்கான ஆரம்ப அறிகுறி தென்பட்டுள்ளது. இவர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.