ADDED : செப் 05, 2025 01:09 AM
ஈரோடு மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தை நாளான செப்.,5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடி, தேசிய, மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இவ்வாறாக மாநில நல்லாசிரியர்களுக்கு இன்று சென்னையில், பள்ளி கல்வித்துறை சார்பில் நடக்கும் விழாவில் விருது, 10,000 ரூபாய் ரொக்கம், வெள்ளி பதக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வழங்குகிறார். இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1. மொடக்குறிச்சி தாலுகா - மன்னாதம்பாளையம் ஊ.ஒ.ந., பள்ளி ஆசிரியர் சு.இளஞ்செழியன். 2. பவானி நகரவை நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சு.முருகேசன். ௩. டி.என்.பாளையம் - கொண்டையம்பாளையம் ஊ.ஒ.ந., பள்ளி தலைமை ஆசிரியர் கு.விஜயகுமார். ௪. நம்பியூர் - கண்ணாங்காட்டுப்பாளையம் ஊ.ஒ.து., பள்ளி தலைமை ஆசிரியர் பெ.காந்தி. ௫. அம்மாபேட்டை -
குருவரெட்டியூர் ஊ.ஒ.து., பள்ளி தலைமை ஆசிரியர் இரா.வெங்கடாசலம். ௬. ஈரோடு, வளையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வெ.நாகராஜ். ௭. புன்செய் புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் அ.உமாகெளரி. ௮. கோபி வேங்கம்மையார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்
து.குணசேகரன். ௯. சிவகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.சுமதி. ௧௦. சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி கணினி பயிற்றுனர் நிலை-1 ர.ரவிகுமார்.
௧௧. கொல்லம்பாளையம் கார்மல் பதின்ம மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆன்சன் பி.ஜோஸ் என, ௧௧ பேர் நல்லாசிரியர் விருது
பெறுகின்றனர்.