/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்ட குற்றப்பிரிவுக்கு 11 போலீசார் நியமனம்
/
மாவட்ட குற்றப்பிரிவுக்கு 11 போலீசார் நியமனம்
ADDED : நவ 17, 2024 01:50 AM
மாவட்ட குற்றப்பிரிவுக்கு
11 போலீசார் நியமனம்
ஈரோடு, நவ. 17-
ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில், சில போலீசார் நீண்ட காலமாக பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மாவட்ட குற்றப்பிரிவில் மாற்றுப்பணியாக இருந்த போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட குற்றப்பிரிவில் இருந்த ஏட்டு பூங்கோதை வெள்ளோடு, ஏட்டு கல்யாண சுந்தரம் சித்தோடு, ஏட்டு குமணன் கவுந்தப்பாடி, ஏட்டு சிலம்பரசு ஈரோடு டவுன், கிரேடு 2 போலீஸ் கார்த்திக் சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வீரப்பன்சத்திரம் எஸ்.எஸ்.ஐ. பரமேஸ்வரன், வரப்பாளையம் ஏட்டு சிவக்குமார், நம்பியூர் ஏட்டு சரவணன், ஈரோடு டவுன் க்ரைம் ஏட்டு தீபா, ஈரோடு தாலுகா ஏட்டுகள் பாண்டிஜோதி, தீபநாயகி, ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த ஏட்டு ஆனந்தி, பெருந்துறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு நித்யா, வீரப்பன்சத்திரம் ஏட்டு வீராசாமி, கொடுமுடி போலீஸ் சண்முக ராஜா, கொடுமுடி கிரேடு 1 போலீஸ் மாணிக்க சுந்தரம் ஆகிய, 11 பேர் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவுக்கு நியமனம் செய்து எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.