/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.1.10 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
/
ரூ.1.10 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
ADDED : மார் 21, 2025 01:22 AM
ரூ.1.10 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
ஈரோடு:சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் அப்துல் குத்துாஸ், சுவர்ணராஜ், பிரவீன்குமார் டாட்டியா, ராஜேந்திர பிரசாத், ரமீத்கபூர், கும்மது ராபி முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சொ.ஜோ.அருண் பேசினார். அவர் பேசுகையில், ''பல்வேறு துறை சார்பில், 96 பயனாளிகளுக்கு 1.10 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. பல்வேறு கோரிக்கை தொடர்பாக சிறுபான்மையினர் வழங்கிய மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார்.

