/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் ௪௧வது அக்னி நட்சத்திர விழா மலை கோவிலில் இன்று மகா வருண ஜெபம்

ADDED : மே 12, 2024 07:28 AM
சென்னிமலை : சென்னிமலையில் முருகன் கோவிலில் ஆண்டு தோறும், சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா நடக்கிறது. இதன்படி, 41வது ஆண்டு விழா கடந்த, 9-ம் தேதி அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு நுாற்றுக்கணக்கான பக்தர்கள், வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி, காவிரி நதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர்.
நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து காலை, 6:00 மணிக்கு, சப்த நதி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு, சென்னிமலை மலை கோவிலை, 16 கி.மீ., சுற்றி கிரிவலம் வந்தனர். பிறகு மலை மீதுள்ள கோவிலுக்கு சென்றனர்.
முக்கிய நிகழ்ச்சியாக முருக பெருமானுக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம், 108 கலசாபிஷேகம் மற்றும் மகா வருண ஜெபம் இன்று காலை, 7:00 மணி முதல் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு மேல் மகா தீபாராதனை, உற்சவமூர்த்தி புறப்பாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.