/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ௧௨ முதல் சிறப்பு முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ௧௨ முதல் சிறப்பு முகாம்
ADDED : நவ 09, 2024 01:19 AM
மாற்றுத்திறனாளிகளுக்கு
௧௨ முதல் சிறப்பு முகாம்
ஈரோடு, நவ. 9-
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளது. தவிர, 'சி கேட்டகிரி' மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கவும் சிறப்பு முகாம் நடத்துகின்றனர். இம்முகாம் வரும், 12 முதல் டிச., 6 வரை மாவட்ட அளவில், 16 இடங்களில் நடக்கிறது.
இதன்படி, வரும், 12ல் கொடுமுடி தாமரைபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 13ல் பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி, 14ல் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 15 ல் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 19ல் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 20ல் தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
வரும், 21ல் ஈரோடு பி.எஸ்.பார்க் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 22ல் டி.என்.பாளையம் அருகே பங்களாபுதுார் அரசு மேல்நிலைப்பள்ளி, 26 ல் பவானி அருசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 27 ல் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 28 ல் கோபி வேங்கம்மையார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, 29 ல் சென்னிமலை, அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, டிச., 3ல் அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, டிச., 4ல் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டிச., 5ல் தாமரைக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி, டிச., 6 ல் கல்கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.