/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எலந்தகுட்டை மேட்டில் 12.80 மி.மீ., மழை பதிவு
/
எலந்தகுட்டை மேட்டில் 12.80 மி.மீ., மழை பதிவு
ADDED : ஜூலை 05, 2024 12:44 AM
ஈரோடு: எலந்தகுட்டை மேட்டில் அதிகபட்ச மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, எலந்தகுட்டை மேட்டில், ௧௨.௮௦ மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதேபோல் கொடிவேரி, சென்னிமலையில் தலா-1, வரட்டுபள்ளம் அணை, 2.20, கோபி-11.20, குண்டேரிபள்ளம் அணையில், 6 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.வனத்துக்கு திரும்பிய யானைகோபி: டி.என்.,பாளையம் வனச்சரக பகுதியில் இருந்து, தாகம் தணிக்க வெளியேறிய ஒரு ஆண் யானை, கோபி அருகே மூலவாய்க்கால் பகுதிக்கு நேற்று முன்தினம் காலை நடமாடியது. டி.என்.,பாளையம் வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் இறங்கினர். நீண்ட போராட்டத்துக்கு பின், தடப்பள்ளி வாய்க்காலை கடந்து வாழைத்தோட்டத்துக்குள் தஞ்ச-மடைந்தது. சில மணி நேரம் கழிந்த பிறகு அதே வழியாக பவானி ஆற்றை கடந்தது. இதை வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். மத்தாளக்கோம்பு என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு முகாமிட்டிருந்தது. அங்கிருந்து டி.என்.பாளையம் பிரதான சாலையை கடந்து, எருமை குட்டை என்ற இடத்தில் உள்ள கரும்புகாடு வழியாக, நேற்று அதிகாலை வனத்துக்குள் சென்றது. வழிதவறிய யானையால், எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என வனத்து-றையினர் தெரிவித்தனர்.