/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
13 மாற்றுத்திறனாளிகள் சென்னைக்கு பயணம்
/
13 மாற்றுத்திறனாளிகள் சென்னைக்கு பயணம்
ADDED : டிச 03, 2025 07:42 AM
ஈரோடு:உலக
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, முதல்வர் தலைமையில் இன்று
சென்னையில் நடக்க உள்ள விழாவில் பங்கேற்பதற்காக, டவுன் பஞ்., பகுதி
மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் செல்லும் வாகனத்தை, ஈரோடு கலெக்டர்
அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார்.
ஆப்பக்கூடல்,
வாணிப்புத்துார், அரச்சலுார், அத்தாணி, மொடக்குறிச்சி,
நெரிஞ்சிப்பேட்டை, ஒலகடம், நம்பியூர், அவல்பூந்துறை,
காஞ்சிகோவில், பி.மேட்டுப்பாளையம், பெத்தாம்பாளையம், ஊஞ்சலுார்
என, 13 டவுன் பஞ்.,களை சேர்ந்த, 13 மாற்றுத்திறனாளி உறுப்பினர்களை
இரு வாகனங்களில் அனுப்பி வைத்தனர். இவர்களுடன் செயல் அலுவலர்,
சுகாதார ஆய்வாளர்கள், துறை சார்ந்த அலுவலர்களும் பயணித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் டவுன் பஞ்.,களின் உதவி இயக்குனர் வெங்கடேஷ் பங்கேற்றார்.

