/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சர்க்கரை வள்ளி கிழங்கு விற்பனை அமோகம்
/
சர்க்கரை வள்ளி கிழங்கு விற்பனை அமோகம்
ADDED : டிச 03, 2025 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு வ.உ.சி., பூங்கா காய்கறி தினசரி மார்க்கெட்டில், சர்க்கரை வள்ளி கிழங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது.
இதுகுறித்து
வியாபாரிகள் கூறியதாவது: கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில்
இருந்து சர்க்கரை வள்ளி கிழங்கு வருகிறது. இந்தாண்டு எதிர்பார்த்த
மழையால் கிழங்கு நன்கு வளர்ந்து அதிக விளைச்சல் கண்டுள்ளது.
இந்தாண்டு
முன்கூட்டியே வரத்தாகி உள்ளது. ஒரு கிலோ, 60 ரூபாய்க்கு
விற்கிறோம். தரமான கிழங்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. மக்கள்
விரும்பி வாங்கி செல்கின்றனர். வரும் நாட்களில் வரத்து மேலும்
அதிகரிக்கும். இதனால் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு
வியாபாரிகள் தெரிவித்தனர்.

