ADDED : டிச 03, 2025 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
ப.செ.பார்க் அருகில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் நடப்பாண்டு
தேர்த்திருவிழா, வரும், ௭ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்றைய தினம் காலை, 8.30 மணிக்கு கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான்
ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதை தொடர்ந்து
ஆலயத்தின் முன்புள்ள கொடி கம்பத்தில் புனித அமல அன்னை உருவம் பதித்த
கொடி ஏற்றப்படுகிறது. அதன்பிறகு தினமும் மாலை, 6:௦௦ மணிக்கு
திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

