அத்யாவசிய பணியாளர் 13,493 பேர் தபாலில் ஓட்டளிக்க விண்ணப்பம்
அத்யாவசிய பணியாளர் 13,493 பேர் தபாலில் ஓட்டளிக்க விண்ணப்பம்
ADDED : ஏப் 08, 2026 06:23 AM
ஈரோடுஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்ட, 15,572 வாக்காளர், மாற்றுத்திறனாளிகள், 12,098 பேர் என, 27,670 வாக்காளர்கள் தபால் ஓட்டுப்பதிவு செய்ய விருப்ப படிவம் '12டீ' வழங்கி, திரும்ப பெறப்பட்டது. இதில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, 7,190 பேர் மட்டும், தபால் ஓட்டு பதிவுக்கு விருப்பம் தெரிவித்தனர்.
இவர்களுக்கு வரும், 13 மற்றும் 14ல் வீடு தேடிச்சென்று ஓட்டை சேகரிக்க உள்ளனர். அதுபோல தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர், அத்யாவசிய பணியாளர்களான அரசு போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர், தேர்தல் பணி அல்லாத பிற போலீஸார் உட்பட, 12 துறையினர் தபால் ஓட்டு பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. அவ்வாறு, 13,493 பேர் தபால் ஓட்டுப்பதிவு செய்ய விருப்ப விண்ணப்பம் வழங்கி உள்ளனர். அவர்களுக்கும் தபால் மூலம் ஓட்டை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
