/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கைத்தறி உதவி இயக்குனர் அலுவலக முற்றுகை முயற்சியில் 138 பேர் கைது
/
கைத்தறி உதவி இயக்குனர் அலுவலக முற்றுகை முயற்சியில் 138 பேர் கைது
கைத்தறி உதவி இயக்குனர் அலுவலக முற்றுகை முயற்சியில் 138 பேர் கைது
கைத்தறி உதவி இயக்குனர் அலுவலக முற்றுகை முயற்சியில் 138 பேர் கைது
ADDED : நவ 13, 2024 03:09 AM
ஈரோடு:ஈரோட்டில்
பவானி சாலையில் உள்ள, கைத்தறி மற்றும் துணி நுால் துறை உதவி இயக்குனர்
அலுவலகத்தை, ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கம் சார்பில்,
நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
பொது
செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர்
சின்னசாமி, கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க தலைவர் சித்தையன்,
பொருளாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்து பேசினர்.கைத்தறி
நெசவாளர் சங்கத்தில் உள்ள நெசவாளர்கள், ஆண்டு முழுவதும் உழைத்தும்
போனஸ் வழங்காத சங்கங்கள் உள்ளன. எனவே சங்கங்களுக்கு அரசு வழங்க
வேண்டிய தள்ளுபடி மானிய தொகையை, குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்க
வேண்டும்.
நெசவாளர் கூலியை வங்கி மூலம் வழங்காமல், 1,500 ரூபாய்
வரையிலான கூலியை ரொக்கமாக வழங்க வேண்டும். தள்ளுபடி மானிய
முன்மொழிவு குறித்து, இயக்குனரின் உத்தரவு மறுபரிசீலனை செய்ய
வேண்டும். நெசவாளர்களின் அடிப்படை கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.
ரக
கட்டுப்பாட்டு சட்டத்தை முறையாக அமலாக்க வேண்டும். கைத்தறி
ரங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து முழு விலக்கு அளிக்க வலியுறுத்தி,
உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை தடுத்த
போலீசார், 64 பெண்கள் உட்பட, 138 பேரை கைது செய்தனர்.